நேர்சிந்தனை

TypewritePhoto By : Suzy Hazelwood

அதிகாலை வேலைதளத்திற்குள் நுழையும் போது இன் முகத்துடன் காலை வணக்கம் சொல்லும் அலுவலக பணியாளர் தொடக்கம், சந்தையில் எதேர்ச்சையாக நாம் உள்ளே செல்லும் வரை ஒரு வினாடி கதவை இழுத்து பிடிக்கும் அறிமுகம் இல்லாத மாமனிதனுக்கும்,

பாதை ஓரம் குடு குடு என அலுவல்களுடன் நடக்கும் போது எதிரே வரும்‌ மனிதனை எந்த காரணமும் இல்லாமல் புன்னகைத்து கடந்து செல்லும் வழிபோக்கர்களுக்கும்,

பஸ் தரிபீடத்தில் வெகு தூரத்தில் இருந்தாலும் சற்று நிறுத்தி நம்மை இறக்கி விட்டு செல்லும் ஓட்டுனர்க்கும், யார் பதிவிட்டு இருந்தாலும் “ஷா!!” என்ன ஒரு அருமையான பதிவு என social media பதிவுகளை Like செய்து அன்பை பகிரும் ஆர்வலர்களுக்கும்,
நெரிசலான காலை பொழுதில் வாகனங்கள் அறக்க பறக்க சென்று கொண்டு இருக்கும் போது 1 நிமிடம் தாமதித்து பாதை கடக்க அனுமதிக்கும் அந்த ஓட்டுனரும், வங்கியில் பேனா இல்லாமல் தடுமாறும் போது பேனா கொடுக்கும் அவனுக்கும், கை தவறி கீழே விழுந்த பேனாவை உடனே எடுத்து தந்துவிட்டு மறைந்து செல்லும் அவளுக்கும்,பெரிய பிழை என்றாலும் “மனிதன் தவறிற்கும் மறதிக்கு இடையில் படைக்கப்பட்டவன்” என்று திருத்திவிடும் மேலதிகாரிகளுக்கும், ஆசிரியர் கடுமையான சொற்களால் திட்டும் போதும் ” எனது எதிர்கால நல் வாழ்விற்காகத்தான்” என புரிந்து பொறுமையுடன் இருக்கும் 10ம் வகுப்பு மாணவனுக்கும். வைத்தியசாலை அருகில் பயணிக்கும் போது நோயாளிகளுக்கு உள்ளத்தால் பிரார்த்தனை செய்து விட்டு செல்லும் அந்த மகானுக்கும். சம்பந்தமே இல்லாத நேரத்தில் அழைப்பை ஏற்படுத்தி “சாப்பிட்டியா?” ஏதும் பிரச்சினையா ?”
என வினவும் நெஞ்சார்ந்த நண்பர்களுக்கும்.

Photo by ROMAN ODINTSOV

சிறு சிறு வெற்றிகளையும் பாராட்டி எமது வளர்ச்சியை பாரிய படிக்கற்களாக மாற்றிய ஒவ்வொருவருக்கும் மற்றும்.. என்னுடைய
இப்பதிவினை பொறுமையோடு கடைசிவரை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும்,
(…)

என் மனக்கண்களுக்கு முன்பாக நுழைந்து மறைந்து போகும் இனம், மொழி,மதம் தெரியாத ஆயிரமாயிரம் மனித புனிதர்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகளையும், பிரார்த்தனைகளை பகிர்வோம்.

ஆம் ….
உறவுகளே!!…
தினந்தோறும் நாம் அன்றாட வாழ்வில் சின்னஞ்சிறிய விடயங்கள் எமக்கு கோடிக்கணக்கான புண்ணியங்களை அள்ளி தருகின்றன.

எனவே எம்மை கடந்து செல்லும் மனிதர்களுக்கு நல்லதை பகிரவும், நேர் சிந்தனைகளை பரப்பவும், அதன் மூலம் எம் வாழ்வில் திருப்தியை உணர்வோமாக!

இந்த சிறுப்பதிவை இத்துடன் நிறுத்தி கொள்ள விரும்பவில்லை எனவே உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இவ்வாறான சின்னஞ்சிறிய மனம் குளிர்ந்த விடையங்களை கீழே பதிவிட்டு செல்லுங்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Written by : Rtr. A.M.M Zaky

நேர்சிந்தனை

By Editor