மாஃபியா – பாதி மிரட்டல்

நடிப்பு – அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர்
தயாரிப்பு – லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கார்த்திக் நரேன்
இசை – ஜேக்ஸ் பிஜாய்
வெளியான தேதி – 21 பிப்ரவரி 2020
நேரம் – 1 மணி நேரம் 52 நிமிடம்

துருவங்கள் 16 படம் மூலம் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி, அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்துள்ள படமாக வெளிவந்துள்ள படம்தான் மாஃபியா. இந்த படத்தில் நடிகர் பிரசன்னா அருண் விஜய்க்கு வில்லனாக டிகே என்ற ரோலில் நடித்து உள்ளார். ஏற்கனவே துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் துருவங்கள் விஜய் அவர்கள் கார்த்திக் நரேன் உடன் கைகோத்து இருந்தார்கள். தற்போது இந்த படத்திலும் இவர்கள் இணைந்து உள்ளார்கள். இந்த படத்தின் மூலம் இவர்கள் இருவர் கூட்டணி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்

 

திரைக்கதை

தமிழகத்துக்கே போதை மருந்து சப்ளை செய்யும் மிகப்பெரிய கும்பலின் தலைவனை, 3 பேர் மட்டுமே சேர்ந்து பிடிக்க முயற்சி செய்வதுதான் ‘மாஃபியா’.

போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார் அருண் விஜய். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக் கிடப்பதால், மற்றும் அவருடைய சகோதரர் போதைப் பொருள் வாங்கச் சென்ற சமயத்தில் மரணமடையவே. அதை அறவே ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம்.

அவருக்குத் துணையாக, அவருடைய குழுவில் ப்ரியா பவானிசங்கர், பாலா ஹாசன் ஆகிய இருவரும் உள்ளனர். அவர்களால் போதை மருந்து கடத்தல் தொடர்பாகக் கீழ்மட்டத்தில் இருக்கும் ஆட்களைப் பிடிக்க முடிந்ததே தவிர, அதற்கு மேலுள்ள ஆட்களை நெருங்க முடியவில்லை. அந்தக் கும்பலின் தலைவன் யார் என்ற சின்ன க்ளூ கூட கிடைக்கவில்லை.

இந்நிலையில், போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவன் யார் என தனக்குத் தெரியும் என்றும், அவனைப் பற்றிய கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும்வரை யாரிடமும் இதைப்பற்றிச் சொல்ல முடியாது என்றும் அருண் விஜய் குழுவின் தலைவர் கூறுகிறார். ஆனால், திடீரென அவர் கொலை செய்யப்படுகிறார். அவருடன் சேர்ந்து ஆதாரங்களைத் திரட்டிய சமூகப் போராளி தலைவாசல் விஜய்யும் கொலை செய்யப்படுகிறார்.

இவர்களைக் கொன்றது யார்? போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவன் யார் எனக் கண்டுபிடிக்க முடிந்ததா? அருண் விஜய் ஆசைப்படி போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க முடிந்ததா? என்பது மீதிக் கதை.

 பின்னணி இசை

 

ஜாக்ஸ் பெஜோய்யின் பின்னணி இசைதான் திரைக்கதை இல்லாத இந்தப் படத்தை, குறைந்தபட்சப் பொறுமையுடன் பார்க்க உதவி புரிகின்றன. விவேக் வரிகளில் பாடல் வரிகள் பெரும்பாலும் புரியவுமில்லை, திரும்பக் கேட்க வேண்டும் என்றும் தோன்றவில்லை.

ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தைக் கொடுத்து மற்றும் காட்சிகளின் வீரியத்தை அதிகரித்திருக்கிறது.

பொசிடிவ் கருத்துக்கள்

 

 

காதல் காட்சிகள் கிடையாது, டூயட் பாடல்கள் கிடையாது, மொக்கை ஜோக்குகள் கிடையாது என சில கிடையாதுகள் படத்தில் இருக்கின்றன. இருந்தாலும் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படத்தை நம் பொறுமையை சோதிக்காமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர்

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக அருண் விஜய். வித்தியாசமான ஹேர் ஸ்டைல், தாடி, விறைப்பான நடை என அந்தக் கதாபாத்திரத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

பிரசன்னா தான் படத்தின் வில்லன். நடுத்தர மல்டி மில்லியனர் தோற்றத்தில் அசத்துகிறார். அவருடைய குரலே அவருடைய கதாபாத்திரத்திற்கு தனி அடையாளத்தைக் கொடுக்கிறது.

வில்லன் வேடம் பிரசன்னா கோபத்தைக் கூட நிதானமாக காட்டுவது மற்றும் வித்தியாசமான மேனரிசம் என கவர்கிறார்.

பிரசன்னாவின் அறிமுகத்துக்கு பிறகே படம் சூடு பிடிக்கிறது. “நீ என்ன பண்ணுவனு தெரிஞ்சிக்க, நான் உன்ன மாதிரி யோசிச்சேன். நீ என்ன மாதிரி யோசிச்சா நான் பண்ணத உன்னால் கண்டுபிடிக்க முடியும்” என்பது போன்ற வசனங்கள் படத்தை ஆங்காங்கே சுவாரஸியப்படுத்துகின்றன.

ஹேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை காட்சிகளின் வீரியத்தை அதிகரித்திருக்கிறது

வருண் கதாபாத்திரத்தில் பாலா ஹாசனின் நடிப்பு, பாராட்டும் வகையில் உள்ளது.

நெகடிவ் கருத்துக்கள்

 

 தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்தல் ஆகியவற்றை மையமாக வைத்து சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 80களில் இப்படியான கடத்தல் படங்கள் நிறையவே வந்தன.

படங்களில் இடம் பெறும் சில வழக்கமான காட்சிகள் படத்தில் இருப்பது சுவாரசியத்தைக் குறைக்கிறது

ஒரு வீடு, ஒரு குடோன், ஒரு ஸ்டார் ஹோட்டல் அறை என சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே படத்தின் காட்சிகள் அதிகம் நகர்கிறது. சமூக சேவகர் என ஒருவரைக் காட்டும் போதே அவரைக் கொன்று விடுவார்களே என யூகிக்க முடிகிறது.

போலீஸ் அதிகாரி ஒருவர் பிரசன்னாவிற்கு உதவியாக இருப்பது, பிரசன்னாவைத் தேடி அருண் விஜய் ஹோட்டலுக்குப் போகும் போது அங்கு இன்ஸ்பெக்டர் பரத் ரெட்டி யதேச்சையாக வருவது போலக் காட்டுவது, அருண் விஜய் முதன் முதலில் குடோனில் துப்பாக்கியில் சுட்டுத் தாக்குதல் நடத்தும் போது அந்த சத்தம் கேட்டு கூட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாருமே வராதது போன்ற சில பல வழக்கமான காட்சிகள் இந்தப் படத்திலும் இருக்கிறது.

கார்த்திக் நரேன் படம் என்பதால் படத்தின் காலை காட்சிக்கே தியேட்டரில் கூட்டம் நிறையவே இருந்தது. அவர்களின் நம்பிக்கையை கார்த்திக் இன்னும் கூடுதலாகக் காப்பாற்றியிருக்கலாம்.

அருண் விஜய் பிரசன்னா இருவருக்கும் கொடுக்கப்பட்ட ஓவர் பில்டப்பைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

சத்யா கதாபாத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார் ப்ரியா பவானிசங்கர். அந்த முகபாவத்தை ஒரே மாதிரியாக வைத்திருந்ததற்குப் பதில் கொஞ்சமாவது ரியாக்‌ஷன் காட்டியிருக்கலாம்

படத்தின் திரைக்கதை என்ன என்பதைத் தேடிப்பிடிக்க பெரிதும் மெனக்கெட வேண்டியிருப்பது, இந்தப் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

குறிப்பாக, சில காட்சிகளை ஸ்லோமோஷனில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அதற்காக, படம் பார்ப்பவன் கொட்டாவி விடும் அளவுக்கு பெரும்பாலான காட்சிகளை ஸ்லோமோஷனில் காட்டுவதெல்லாம் அதீதம்.

மொத்தத்தில் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பு, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் என அடுத்தப்பாகாத்திற்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கின்றது இந்த மாஃபியா.

-Rtr. Nihmathullah Hameed

 

Sinhala Translation

 අරුන් විජේ, ප්‍රසන්න, ප්‍රියා භවානි ශංකර්

නිෂ්පාදනය – ලයිකා නිෂ්පාදන

අධ්‍යක්ෂණය – කාර්තික් නාරේන්

සංගීතය – ජැක්ස් බෙජෝයි

නිකුත් කර දිනය – 2020 පෙබරවාරි 21

වේලාව – පැය 1 යි විනාඩි 52 යි

කාර්තික් නාරේන් අධ්‍යක්ෂණයට පිවිසියේ වයස අවුරුදු 16 දී. ලයිකා ප්‍රඩක්ෂන්ස් වෙනුවෙන් අරුන් විජේ, ප්‍රසන්න, ප්‍රියා භවානිශංකර් සහ සුභාෂ්කරන් රංගනයෙන් දායක වේ. එය මාලාවේ තුන්වන චිත්‍රපටයයි. නළු ප්‍රසන්න දුෂ්ටයෙකුගේ චරිතයට පණ පොවයි. පොලාරිස් 16 චිත්‍රපටය හරහා කාර්තික් නාරේන් සමඟ පොලාරිස් විජේ මේ වන විටත් අත්වැල් බැඳගෙන තිබේ. මෙම චිත්‍රපටය හරහා දෙදෙනාගේ සන්ධානය ජය ගත්තාද? එය නොවේ ද? බලමු!

තිර රචනය

තමිල්නාඩුවේ විශාලතම මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන්ගේ කල්ලියේ නායකයා අල්ලා ගැනීමට උත්සාහ කරන්නේ තිදෙනෙකු පමණි.

අරුන් විජේ මත්ද්‍රව්‍ය වැළැක්වීමේ නිලධාරියෙකි. සෑම කෙනෙක්ම වයස නොතකා මත්ද්‍රව්‍යවලට ඇබ්බැහි වී සිටින අතර, ඔහුගේ සහෝදරයාද මත්ද්‍රව්‍යවලට ඇබ්බැහි වී මිය යයි. එබැවින් ඔහුගේ අභිප්‍රාය වන්නේ එයින් අනෙක් මිනිසුන් මුදවා ගැනීමයි.

ඔහුගේ කණ්ඩායම ප්‍රියා භවානිශංකර් සහ බාලා හසන්ගෙන් සමන්විතය. මත්ද්‍රව්‍ය ජාවාරම සම්බන්ධයෙන් යටි පංතියේ ළමයින් අල්ලා ගැනීමට ඔවුන්ට හැකි වූ නමුත් ඉහළට යාමට නොහැකි විය. කල්ලියේ නායකයා කවුද යන්න පිළිබඳ කුඩා හෝඩුවාවක්වත් නැත.

කණ්ඩායමේ නායක අරුන් විජේ පවසන්නේ මත්ද්‍රව්‍ය ජාවාරම් කල්ලියේ නායකයා කවුරුන්ද යන්න තමා දන්නා බවත් වැඩිදුර සාක්ෂි ලැබෙන තුරු කිසිවෙකුට පැවසිය නොහැකි බවත්ය. එහෙත්, හදිසියේම, ඔහු අභිරහස් ලෙස අතුරුදන් විය. ඔහු සමඟ සාක්ෂි රැස්කර ගත් සමාජ ක්‍රියාකාරිකයෙක් වන විජයම්ද අතුරුදන් විය.

ඔවුන් මැරුවේ කවුද? මත්ද්‍රව්‍ය ජාවාරම් කල්ලියේ නායකයා කවුදැයි ඔබට සොයාගත හැකිද? අරුන් විජේ මත්ද්‍රව්‍ය ජාවාරම නතර කිරීමට කැමතිද?

පසුබිම් සංගීතය

ජැක්ස් බෙජායිගේ පසුබිම් සංගීතය මෙම චිත්‍රපටය සුවපහසු ලෙස නැරඹීමට අපට උපකාරී වේ. පද රචක විවේක්ගේ පද රචනය සමහර විට තේරුම් ගැනීම අපහසුය. ජැක්ස් බෙජායිගේ පසුබිම් සංගීතය චිත්‍රපටයට ශක්තියක් එක් කර ඇති අතර දර්ශනවල ශක්තියද වැඩි කර තිබේ. පරෙවියාගේ පසුබිම් සංගීතය දර්ශනවල ශක්තිය වැඩි කර ඇත

ධනාත්මක අදහස්

ආදර දර්ශන, යුග ගීත, විහිළු සහ විහිළු නැත. කෙසේ වෙතත්, අපගේ ඉවසීම පරීක්ෂා කිරීම සඳහා අධ්‍යක්ෂවරයා අපට පැය දෙකකට අඩු කාලයක් ලබාදී ඇත.

අරුන් විජේ මත්ද්‍රව්‍ය නිවාරණ අංශයේ ප්‍රධානියා වේ. වෙනස් කොණ්ඩ මෝස්තරයක්, රැවුල, තද විලාසිතාව භූමිකාවට සම්බන්ධ වේ.

ප්‍රසන්න චිත්‍රපටයේ දුෂ්ටයා ය. ඔහුගේ කෝටිපති පෙනුම බියජනක ය. ඔහුගේ කටහඬ ඔහුගේ චරිතයට අද්විතීය අනන්‍යතාවයක් ලබා දෙයි.

ප්‍රසන්න කෝපය සියුම් ලෙස පෙන්වයි. මෙය අත්පොළසන් ලැබීමට සුදුසුයි.

ප්‍රසන්න හඳුන්වා දීමෙන් පසු චිත්‍රපටය රසවත් වේ. “ඔබ කරන්නේ කුමක්දැයි මම දනිමි, මම ඔබ ගැන සිතුවෙමි. මා ඔබ ගැන සිතන දේ ඔබට සොයාගත හැකිය” වැනි පද, චිත්‍රපටය උණුසුම් කරයි.

සෘණ අදහස්

චිත්‍රපටයේ සිදුවන සමහරක් දර්ශන රසවත් නොවේ. පසුගිය වසර කිහිපය තුළ දෙමළ සිනමාවේ මත්ද්‍රව්‍ය ජාවාරම පිළිබඳව අවධානය යොමු කරන චිත්‍රපට කිහිපයක් තිබේ.

බොහෝ රංගන පටිගත කිරීම් සිදුවී ඇත්තේ නිවසක් හෝ හෝටල් කාමරයක් වැනි ස්ථාන කිහිපයක පමණි. එබැවින් එයට බොහෝ විවේචනාත්මක අදහස් පල වුනේය.

කාර්තික් නාරේන් චිත්‍රපටයක් වන නිසා උදෑසන වේලාවේද රංග ශාලාවන්ද පිරී තිබුණි. එමනමුත් ඔහුට තවත් ඔහුගේ දක්ෂතා එලිදැක්වීමට තිබුණි. ප්‍රියා භවානිශංකර්ගේ චරිතය එකම ඉරුයව්වෙන් රංගනයේ යෙදී ඇත.

චිත්‍රපටය කුමක් දැයි සොයා බලන්න!

Translation:- Rtr. Suwithi Karunasekara

English Translation

Starring – Arun Vijay, Prasanna, Priya Bhavani Shankar

Production – Lyca Productions

Direction – Karthik Narain

Music – Jax Bejoy

Release date – 21 February 2020

Running time – 1 hour 52 min

Plot

Naren made his directorial debut at the age of 22 with the critically and commercially successful thriller Dhuruvangal Pathinaaru. Mafia is the third film in this movement, starring Arun Vijay, Prasanna, Priya Bhavani Shankar and Subhashkaran under the production of Lyca Production. Actor Prasanna plays the role of the villain. Dhruvangal Vijay has already joined hands with Karthik Narain through the movie ‘Dhruvangal 16’. They are currently in the film. Did their duo win through this film? Or not? Let’s see!

Three people are trying to capture the leader of the largest gang of drug dealers in Tamil Nadu. “Mafia” is fully based on the above content

Arun Vijay is an officer in the Prevention of Drug Trafficking. Due to the death of his brother through his drug addiction, Arun Vijay intends to get rid of it.

His team consists of Priya Bhavanishankar and Bala Hassan. They were able to catch the underclassmen in connection with drug trafficking, but could not reach the top ones. They were not able to obtain a small clue about the drug baron.

The leader of the group of Arun Vijay’s gang, says he knows who the leader of the drug trafficking gang is and cannot tell anyone until proper evidence is obtained. But, suddenly, he is murdered. Thalaivaasal Vijay, the social activist who has amassed evidence along with him, is also murdered.

The rest of the story details on the murder, who the drug baron is and if Arun Vijay can stop the drug trafficking.

Background music

The background music of Jakes Bejoy brings us to watch this movie comfortably. Lyrics in Vivek are often incomprehensible and are not very fond. Jakes Bejoy’s background music has added strength to the film and increased the vigor of the scenes.

Positive comments

Arun Vijay is the Chief of the Drug Prevention Division. A different hairstyle, beard, a stiff style made him best fit his role.

Prasanna is the villain of the film. His multi-millionaire looks are appalling. His voice gives him a unique identity. The villain’s role, Prasanna, shows anger subtly which deserves applause. After the introduction of Prasanna, the film gets interesting. Verses such as “I will know what you’re doing, If I start thinking like you” made the film more thrilling.

There are no romantic scenes, no duet songs, no jokes. However, the director managed to give a thriller movie. The background music of the Jakes Bejoy has increased the vigor of the scenes

Bala Hassan’s performance as Varun is admirable.

Negative comments

In the past few years there have been only a few films focusing on drug trafficking in Tamil cinema. although, during the 80s there were a lot of films based on the exact concept. Some of the scenes that take place in the film are less interesting.

The biggest weakness of the film was that the plot was easily comprehensible. The scene where the social worker was killed was predictable. Also, the shooting had only taken place in several locations such as a house, a godown, a star hotel room. Thus, it was a little boring.

The Assistant Commissioner of Police helped Prasanna and Arun Vijay go to a restaurant to meet Prasanna and accidentally meeting the inspector was a disappointment to the audience. And the gunshot attack by Arun Vijay and his team in godown was not practical at all.

Since it is a Karthik Narain movie, a big crowd was present in the theater at the morning show. Karthik could have performed better to have gained more praise and trust. Also, the extra build-up given to both Arun Vijay and Prasanna should have been avoided.

Priya Bhavanishankar showed out the same facial expression literally in all the scenes.

In particular, it is nice to see some of the scenes in slow motion. Although, some scenes which were presented in slow motion boosted boredom. Even though the first half was a bit slow, the second half had a climax and twist which raised expectations for the following chapter of Mafia.

Translation:- Rtr. Nihmathullah Hameed

 

By RACALBS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *